Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Friday, July 26, 2013

சுற்றுச் சூழல்





நெற்பயிரை விளைச்சிடவே நாத்து வேணும் 

நல்ல நாத்து வேணும்.

சுத்தமான மூச்சு விட காத்து வேணும்

நல்ல காத்து வேணும்.

நல்ல காத்து வேணுமுன்னா நல்ல சூழல் வேணும்

சுற்றுச் சூழல் வேணும்.

நல்ல சுற்றுச் சூழலைத்தான் காக்க வேணும்

பாதுகாக்க வேணும்.

அக்கம் பக்கம் தூய்மையா வைக்க வேணும்

தூய்மையா வைக்க வேணும்!


குப்பை கூளம் அண்டாம காக்க வேணும்

நாம காக்க வேணும்.

வீதி சுத்தம் இருந்தாத்தான் சுத்தமாகும் வீடு

சுத்தமாகும் நம்ம வீடு.

ஊரு சுத்தம் இருந்தாத்தான் சுத்தமாகும் வீதி

சுத்தமாகும் வீதி.

வீட்டு குப்பையை வீதியிலே வீசக்கூடாது

நாம வீசக்கூடாது,

அடுத்த வீட்டை குப்பை மேடா ஆக்கக்கூடாது

நாம ஆக்கக்கூடாது!


ண்ட இடத்தில் எல்லாம் நாம துப்பக் கூடாது

எச்சில் துப்பக் கூடாது.

காலையிலே அசுத்தம் எங்கும் செய்யக்கூடாது

அசுத்தம் செய்யக்கூடாது.

பிள்ளைக்கெல்லாம் நாம கத்துக் கொடுக்கோணும்

சுத்தம் கத்துக் கொடுக்கோணும்.

சுத்தம் சோறு போடும்னு சொல்லிக் கொடுக்கோணும்

நாம சொல்லிக் கொடுக்கோணும்.

சுற்றுச் சூழல் பாதுகாத்தா தீங்கு வராது

ஒரு தீங்கு வராது!


வீட்டு நலம் பாதுகாத்தா தீங்கு வராது

உடல் தீங்கு வராது.

நாட்டு நலம் பாதுகாத்தா நோய்கள் வராது

தொற்று நோய்கள் வராது.

ஏட்டுக் கல்வி மட்டும் நம்மை வாழ வைக்காது

நம்மை வாழ வைக்காது.

பசுமரங்களைத்தான் நாம வெட்டக் கூடாது

என்றும் நாம வெட்டக் கூடாது.

மரங்களைத்தான் நட்டு வந்தா வறட்சி வராது

நாட்டில் வறட்சி வராது!

<>     <>   <>   <>   <>   <>   <>   <>  <>  <>




Monday, June 24, 2013

மழை நீர் சேகரிப்பு

                                      
  மழை நீர் சேகரிப்பு
 ================

            பல்லவி 
            =======

தூறல் தூறல் விழுகின்றது -- மழைச் 
சாரல் சாரல் தெரிக்கின்றது!
விழுகின்ற நீரைச் சேகரிப்போம் 
வாழ்வில் வளங்களைச் சேர்த்திடுவோம்.


               சரணம் 
               ======

வீணாய்  போகிற மழை நீரை 
தேனாய் ஆக்கிட சேகரிப்போம் 
கடலில் கலக்கிற மழை நீரை 
நிலத்தடி நீராய் மாற்றிடுவோம் 


நீரின்றி ஓர் உயிரேது...
நீரில்லாமல் நெற்பயிரேது?
செயற்கை மழையும் தேவையில்லை 
செழிப்பாய் நாமும் வாழ்ந்திடலாம்.

நேரம் இன்றி தவிக்கின்றோம் -- குடி 
நீருக்கு நாமும் அலைகின்றோம்,
இயற்கை தருகின்ற மழை நீரை 
ஏனோ நாமும் தவிர்க்கின்றோம்! 

ன்றே நாமும் வாழ்ந்திடவே
நாளைய தேவைக்கு நீர் சேர்ப்போம்,
இன்றே நாமும் மனம் வைப்போம்
நிலத்தடி நீருக்கு வழி செய்வோம்.

யற்கை தருகின்ற மழை நீரை 
இனிதே நாமும் சேர்த்திடலாம் 
நிலத்தடி நீரும் இருந்தாலே,
நிம்மதி தானே வாழ்நாளே!

ண்ணின் வளமும் பெருகிடுமே 
மரங்களும் செழித்து வளர்ந்திடுமே 
மலர்களும் பூத்து குலுங்கிடுமே,
மனங்களும் மகிழ்ச்சியில் திளைத்திடுமே!

<><><><><> <><><><><> <><><><><>



Monday, November 21, 2011

தேர்தல்



கையிலே வச்ச நோட்டு
கால் வயிறு காணலையே ,
விரலிலே வச்ச பொட்டு
நிறமின்னும் மாறலையே !

தினந்தோறும் கும்பிட்டவங்க
திரும்பித்தான் பார்க்கலையே ,
தெருதோறும் வந்தவங்க
தென்படவே இல்லீங்களே !

தேர்தல் முடிஞ்சதுங்க
தெரு முழக்கம் நின்னதுங்க
ஊர்வலம் முடிஞ்சதுங்க
ஊரும் ஆடி ஓஞ்சதுங்க !

இனி வாக்கு கேட்டவங்க
போக்கு காட்டுவாங்க
நோட்டு கொடுத்தவங்க
நிறையத்தான் சேமிப்பாங்க

நாளும் பார்த்ததுதான்
நாளைக்கும் பார்த்திடலாம் ,
அடுத்த தேர்தலப்போ ...
அவங்களையும் பார்த்திடலாம் !

ஏழைங்க குறைதீர்க்க
எவருக்கும் அக்கறை இல்லே
ஏழைமையை போக்கத்தான்
யாருக்கும் மனமேயில்லே !

வானிருக்கு ... வயலிருக்கு
வாழரெண்டு கையிருக்கு,
போனது போகட்டும்பா...
பொழப்ப பாருங்கப்பா !

            ooOoo  

Thursday, November 3, 2011

என் முகமே எனக்கென்றும் வேண்டும்




ன் முகமே எனக்கென்றும் போதும் - இனி
எனக்காக நான் வாழ வேண்டும் !

செய்திட்ட சேவை எல்லாம் போதும்- இனி
செத்திடும் வரை தனிமை வேண்டும் !

நட்பென்று வந்ததெல்லாம் போதும் - இனி
நடந்திட என் கால் மட்டும் போதும் !

ர் படித்த வாழ்த்துகள் போதும் - இனி
உருப்படியாய் என்னை விட வேண்டும் !

எனை வந்து பலர் பார்த்தது போதும் - இனி
எனையே நான் பார்த்திடவும் வேண்டும் !

தலையாட்டி நான் இளித்தது போதும் - இனி
தனிமையில் நான் சிந்திக்க வேண்டும் !

போலித்தன சிரிப்பொலிகள் போதும் - இனி
பனிமலர்கள் சிரிப்பொன்றே வேண்டும் !

நாள்தோறும் ஆர்பாட்டம் போதும் - இனி
நான் போக பாலைவனம் வேண்டும் !

உறவென்று எனை கொன்றது போதும் - இனி
உட்கார ஒரு சிறையே வேண்டும் !

சூடான போர்வை எல்லாம் போதும் - இனி
சூரியனின் சூடொன்றே வேண்டும் !

நான்கண்ட பொய் முகங்கள் போதும் - இனி
என் முகமே எனக்கென்றும் வேண்டும்






Wednesday, October 12, 2011

மனிதனை தேடுகிறேன்




னிதனை இங்கே தேடுகிறேன் - ஒரு
மனிதனை இங்கே தேடுகிறேன்

ஒருவன் முகத்தை மாற்றுகிறான் - பொய்
முகத்தை நாளும் காட்டுகிறான்.
நடிப்பதை நிறுத்தி நல்வழியில் - அவன்
படித்ததை நெஞ்சில் புகுத்திவிடும்
மனிதனை இங்கே தேடுகிறேன்

பூக்கள் வண்ணத்தை மாற்றவில்லை - தன்
வாசத்தில் வேஷத்தை சேர்க்கவில்லை
பூக்களைப்போல் மனம் திறந்துகொண்டு - நல்ல
பாக்களைப்போல் சொல் வழங்கிவிடும்
மனிதனை இங்கே தேடுகிறேன் -

றம் படைத்தான் , ஆண்டவன் படைத்தான்
மறை படைத்து பல மதம் படைத்தான்.
பிறரையும் தன்போல் மதித்துவிடும் - அந்த
மனம் படைத்த நல்ல குணம் படைத்த
மனிதனை இங்கே தேடுகிறேன்

விழிகளை மறைத்து இருட்டு என்றான்
திசைகளை திருப்பி வழி என்றான்
இதயத்தை காட்டி அழைத்துக் கொள்ளும் - கையில்
இருப்பதை ஊட்டி அணைத்துக் கொள்ளும்
மனிதனை இங்கே தேடுகிறேன் .

னிதனை இங்கே தேடுகிறேன் - ஒரு
மனிதனை இங்கே தேடுகிறேன்

Saturday, September 10, 2011

சுமைகள்



பிறந்தவுடன் பயணம் செய்தேன் இறப்பதற்கு ,
போகும் வழியில் எதையெதையோ சுமப்பதற்கு
தத்தி தத்தி நடக்கையிலே
என்னென்ன சுகங்கள் ,
தள்ளாடி போகையிலே எத்தனையோ சுமைகள்.

பள்ளிக்கு போகையிலே பாடங்களை சுமந்தேன்
படித்து முடிக்கையிலே பட்டங்களை சுமந்தேன் ,
பருவத்தின் வாசலிலே கனவுகளை சுமந்தேன் ,
பாவையரை
காண்கையிலே கற்பனைகள் சுமந்தேன்

வேலைஒன்று தேடும்போது விரக்தியினை சுமந்தேன்
வேலையது கிடைத்தபோது பேராசைகளை சுமந்தேன்
ஆசைக்கு ஒருத்தியென்று வந்தவளை சுமந்தேன்
ஆசையோடு அவள் பெற்றவரை பாசத்தோடு சுமந்தேன்

பெற்றபிள்ளை வளர்ந்திடவே தியாகங்களை சுமந்தேன்,
வளர்ந்தபிள்ளை விட்டு ஓடும்போது வேதனைகள் சுமந்தேன்
சொந்தமென்று பந்தமென்று பலபேரை சுமந்தேன்
அவர் தந்த தொல்லைகளை சுகமென்றே சுமந்தேன்.

முதுமையிலே தனிமையிலே வெறுமையினை சுமந்தேன்
மூச்சுவிடும் நேரத்திலும் ஆசைகளை சுமந்தேன்
உடலோடு சேர்ந்துவரும் உயிரையும் நான் சுமந்தேன்,
உயிர்போகும் நேரத்திலும் செய்த பாவங்களை சுமந்தேன்.

oo0oo

Saturday, November 7, 2009

வில்

புருவங்களை புலவர்கள்
வில் என்றனர் .
உனது புருவங்க ளோ என்னை
" நில் " என்கின்றன.