Wednesday, September 14, 2011

தவிக்குது மனசு

பல்லவி

தனியா தவிக்குது மனசு
தகறாரு செய்யற வயசு .
வாசமுல்லை சூடிகிட்டு
வாடி என்னை தேடிகிட்டு.




சரணம்


வரப்போரம் நீ நடந்தா - என்
நரம்பெல்லாம் முறுக்கேறும் ,
நாத்து நீ நடும்போது ,
ரத்தம் மெல்ல சூடேறும் !
ராத்திரி நேரம் வந்தா - அந்த
நிலவு என்னை சுட்டெரிக்கும் ,
ஆத்தாடி உன் வனப்பு - அதை
சுத்திவரும் என் நெனப்பு.
பூ வாடை காத்து அடிச்சு - அடி
புண்ணாச்சு என் உடம்பு,
பாவாடை போத்திருக்கும் - என்
போர்வையே நீ வாடி .
கண்ணுக்குள்ளே கள்ளுக்கடை - என்
கண்ணே ஏன் கதவடைப்பு ?
மதுவிலக்கு நேரமில்லே - வீண்
கதவடைப்பு தேவையில்லே.


^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Saturday, September 10, 2011

சுமைகள்



பிறந்தவுடன் பயணம் செய்தேன் இறப்பதற்கு ,
போகும் வழியில் எதையெதையோ சுமப்பதற்கு
தத்தி தத்தி நடக்கையிலே
என்னென்ன சுகங்கள் ,
தள்ளாடி போகையிலே எத்தனையோ சுமைகள்.

பள்ளிக்கு போகையிலே பாடங்களை சுமந்தேன்
படித்து முடிக்கையிலே பட்டங்களை சுமந்தேன் ,
பருவத்தின் வாசலிலே கனவுகளை சுமந்தேன் ,
பாவையரை
காண்கையிலே கற்பனைகள் சுமந்தேன்

வேலைஒன்று தேடும்போது விரக்தியினை சுமந்தேன்
வேலையது கிடைத்தபோது பேராசைகளை சுமந்தேன்
ஆசைக்கு ஒருத்தியென்று வந்தவளை சுமந்தேன்
ஆசையோடு அவள் பெற்றவரை பாசத்தோடு சுமந்தேன்

பெற்றபிள்ளை வளர்ந்திடவே தியாகங்களை சுமந்தேன்,
வளர்ந்தபிள்ளை விட்டு ஓடும்போது வேதனைகள் சுமந்தேன்
சொந்தமென்று பந்தமென்று பலபேரை சுமந்தேன்
அவர் தந்த தொல்லைகளை சுகமென்றே சுமந்தேன்.

முதுமையிலே தனிமையிலே வெறுமையினை சுமந்தேன்
மூச்சுவிடும் நேரத்திலும் ஆசைகளை சுமந்தேன்
உடலோடு சேர்ந்துவரும் உயிரையும் நான் சுமந்தேன்,
உயிர்போகும் நேரத்திலும் செய்த பாவங்களை சுமந்தேன்.

oo0oo