Saturday, September 10, 2011

சுமைகள்



பிறந்தவுடன் பயணம் செய்தேன் இறப்பதற்கு ,
போகும் வழியில் எதையெதையோ சுமப்பதற்கு
தத்தி தத்தி நடக்கையிலே
என்னென்ன சுகங்கள் ,
தள்ளாடி போகையிலே எத்தனையோ சுமைகள்.

பள்ளிக்கு போகையிலே பாடங்களை சுமந்தேன்
படித்து முடிக்கையிலே பட்டங்களை சுமந்தேன் ,
பருவத்தின் வாசலிலே கனவுகளை சுமந்தேன் ,
பாவையரை
காண்கையிலே கற்பனைகள் சுமந்தேன்

வேலைஒன்று தேடும்போது விரக்தியினை சுமந்தேன்
வேலையது கிடைத்தபோது பேராசைகளை சுமந்தேன்
ஆசைக்கு ஒருத்தியென்று வந்தவளை சுமந்தேன்
ஆசையோடு அவள் பெற்றவரை பாசத்தோடு சுமந்தேன்

பெற்றபிள்ளை வளர்ந்திடவே தியாகங்களை சுமந்தேன்,
வளர்ந்தபிள்ளை விட்டு ஓடும்போது வேதனைகள் சுமந்தேன்
சொந்தமென்று பந்தமென்று பலபேரை சுமந்தேன்
அவர் தந்த தொல்லைகளை சுகமென்றே சுமந்தேன்.

முதுமையிலே தனிமையிலே வெறுமையினை சுமந்தேன்
மூச்சுவிடும் நேரத்திலும் ஆசைகளை சுமந்தேன்
உடலோடு சேர்ந்துவரும் உயிரையும் நான் சுமந்தேன்,
உயிர்போகும் நேரத்திலும் செய்த பாவங்களை சுமந்தேன்.

oo0oo

3 comments:

வெங்கட் நாகராஜ் said...

மிகவும் நல்ல கவிதை.... கவிதைக்கேற்ற படம்.....

சுமைகள்தான் எத்தனை எத்தனை....

Rekha raghavan said...

//பெற்றபிள்ளை வளர்ந்திடவே தியாகங்களை சுமந்தேன்,
வளர்ந்தபிள்ளை விட்டு ஓடும்போது வேதனைகள் சுமந்தேன்//

யதார்த்தமான வரிகள். அருமையான கவிதை. பகிர்வுக்கு நன்றி.

கே. பி. ஜனா... said...

மனதைச் சுமையாக்கி விட்டது கவிதை!