
மனிதனை இங்கே தேடுகிறேன் - ஒரு
ஒருவன் முகத்தை மாற்றுகிறான் - பொய்
முகத்தை நாளும் காட்டுகிறான்.
நடிப்பதை நிறுத்தி நல்வழியில் - அவன்
படித்ததை நெஞ்சில் புகுத்திவிடும்
மனிதனை இங்கே தேடுகிறேன்
பூக்கள் வண்ணத்தை மாற்றவில்லை - தன்
வாசத்தில் வேஷத்தை சேர்க்கவில்லை
பூக்களைப்போல் மனம் திறந்துகொண்டு - நல்ல
பாக்களைப்போல் சொல் வழங்கிவிடும்
மனிதனை இங்கே தேடுகிறேன் -
அறம் படைத்தான் , ஆண்டவன் படைத்தான்
மறை படைத்து பல மதம் படைத்தான்.
பிறரையும் தன்போல் மதித்துவிடும் - அந்த
மனம் படைத்த நல்ல குணம் படைத்த
மனிதனை இங்கே தேடுகிறேன்
விழிகளை மறைத்து இருட்டு என்றான்
திசைகளை திருப்பி வழி என்றான்
இதயத்தை காட்டி அழைத்துக் கொள்ளும் - கையில்
இருப்பதை ஊட்டி அணைத்துக் கொள்ளும்
மனிதனை இங்கே தேடுகிறேன் .
மனிதனை இங்கே தேடுகிறேன் - ஒரு
மனிதனை இங்கே தேடுகிறேன்
3 comments:
நல்ல கவிதையைத் தேடினேன், கிடைத்தது.
//நடிப்பதை நிறுத்தி நல்வழியில் - அவன்
படித்ததை நெஞ்சில் புகுத்திவிடும்
மனிதனை இங்கே தேடுகிறேன்//
நல்ல சிந்தனை. நல்லதொரு கவிதையை வாசித்த திருப்தி.
நல்ல கவிதை...
Post a Comment