Thursday, November 3, 2011

என் முகமே எனக்கென்றும் வேண்டும்




ன் முகமே எனக்கென்றும் போதும் - இனி
எனக்காக நான் வாழ வேண்டும் !

செய்திட்ட சேவை எல்லாம் போதும்- இனி
செத்திடும் வரை தனிமை வேண்டும் !

நட்பென்று வந்ததெல்லாம் போதும் - இனி
நடந்திட என் கால் மட்டும் போதும் !

ர் படித்த வாழ்த்துகள் போதும் - இனி
உருப்படியாய் என்னை விட வேண்டும் !

எனை வந்து பலர் பார்த்தது போதும் - இனி
எனையே நான் பார்த்திடவும் வேண்டும் !

தலையாட்டி நான் இளித்தது போதும் - இனி
தனிமையில் நான் சிந்திக்க வேண்டும் !

போலித்தன சிரிப்பொலிகள் போதும் - இனி
பனிமலர்கள் சிரிப்பொன்றே வேண்டும் !

நாள்தோறும் ஆர்பாட்டம் போதும் - இனி
நான் போக பாலைவனம் வேண்டும் !

உறவென்று எனை கொன்றது போதும் - இனி
உட்கார ஒரு சிறையே வேண்டும் !

சூடான போர்வை எல்லாம் போதும் - இனி
சூரியனின் சூடொன்றே வேண்டும் !

நான்கண்ட பொய் முகங்கள் போதும் - இனி
என் முகமே எனக்கென்றும் வேண்டும்






4 comments:

கே. பி. ஜனா... said...
This comment has been removed by the author.
கே. பி. ஜனா... said...

இக்கவிதை படித்திட்டாலே போதும் - தங்கள்
*இயற்றிறன் என்றும் பறைசாற்றும்!
(*இயற்றும் திறன்)

கே. பி. ஜனா... said...
This comment has been removed by the author.
”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

SUPER SIR, REALLY!