
வாராயோ தோழி வாராயோ - (மெட்டு)
------------------------------------------------
பல்லவி
*********
வாழ்வாய் என் கண்ணே நிடூழி
உனை சூழ இன்பம் பல கோடி
புதுக்காலை புனலில் நீராடி - நீ
புதுக்கோலம் காண்பாய் மலர் சூடி
சரணம்
********
புலராத பொழுது புலரும் - புது
பொலிவோடு வதனம் திகழும்
பனிதூவும் மலர்கள் மலரும் - இவள்
துயில் நீங்கி மெல்ல எழுவாள்.
மணவாளன் செல்ல விடுவானோ
மணப்பெண்ணும் நாணம் விடுவாளோ?
எழுதாதா கவிகள் எழுதும் -
விழிகள் பழகாத கலைகள் பழகும்.
பேசாத மொழிகள் பேசும் - இதழ்கள்
பொல்லாத செயல்கள் புரியும்
விலகாத ஆடை விலகாதோ
விளக்கெல்லாம் விழிகள் மூடாதோ?
சிலிர்க்காத உடலும் சிலிர்க்கும் - முன்பு
துளிர்க்காத இன்பம் துளிர்க்கும்
இடைகூட மெல்ல துவளும் - இன்பம்
இடைவேளை இன்றி தொடரும்,
இடைவேளை இன்றி தொடரும்,
படைகொண்டு காமன் வருவானோ
பகலான போதும் விடுவானோ ?
000oo 00o00 00o00 oo0oo oo0oo
000oo 00o00 00o00 oo0oo oo0oo
(பல வருடங்களுக்கு முன்பு ஒரு பத்திரிக்கையில் "வாராயோ தோழி வாராயோ" பாடல் மெட்டில் எழுதி அனுப்பச் சொன்ன போட்டிக்காக எழுதிய பாட்டு)
2 comments:
அந்த பாட்டு வரிகளுடன் கன கச்சிதமாக பொருந்துவதும் அர்த்தமுள்ள வார்த்தைகளும் பலே பலே!
பாட்டின் வரிகள் அர்த்தம் பொதிந்து இருக்கிறது. வாராயோ தோழி வாராயோ பாடலின் மெட்டுக்கும் கச்சிதமாகப் பொருந்துகிறது... பாராட்டுகள்...
Post a Comment